அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக இலங்கை அரசு பெட்ரோல் விலையை 25% உயர்த்தியுள்ளது.
இலங்கை அதிபர் அநுரகுமார திஸ்ஸநாயக, “மத்திய கிழக்குப் பகுதியில் நடைபெறும் போர் இலங்கையின் எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்கக்கூடும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் கடந்த புதன்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு நான்கு வேலை நாள்கள் மட்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்த இலங்கை அதிபர் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறைக்கு மாறும் ஏற்பாடுகளை மேற்கொள்ள நிறுவனங்களிடம் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை அரசு கடந்த வாரம் பெட்ரோல் விலை 8% உயர்த்தியிருந்தது. மேலும், பெட்ரோல் நுகர்வை கட்டுப்படுத்தும் விதமாக ரேஷன் முறையில் பெட்ரோல் வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், இன்று பெட்ரோல் விலையை மேலும் 25% உயர்த்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ரூ.317 ஆக இருந்த 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 398 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி டீசல் விலையும் ரு. 79 உயர்த்தி ரூ. 382 -க்கு விற்கப்படுகின்றது.
இந்த விலையேற்றத்தின் மூலம் 15 முதல் 20 சதவீதம் எரிசக்தி பயன்பாடு குறைய வாய்ப்புள்ளதாக இலங்கை பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகள் எரிசக்தி பற்றாக்குறையால் அவதிப்படுகின்றன. இதில், இலங்கை எண்ணெய் இறக்குமதிக்கு அதிகளவு வளைகுடா நாடுகளை நம்பியுள்ளது. மேலும், மின் உற்பத்திக்கு நிலக்கரியையும் அங்கிருந்தே இறக்குமதி செய்கிறது.
Summary
Sri Lanka raises fuel prices by 25 percent due to war
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எதனால் ‘எத்தனால்’?

ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை

பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தும் திட்டமில்லை -மத்திய அரசு விளக்கம்

நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

