தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

ஈரானிய எண்ணெய் வர்த்தகம் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா!

ஈரானிய எண்ணெய் வர்த்தகம் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

News image

அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் - AP

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

ஈரானிய எண்ணெய் வர்த்தகம் மீதான தடையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரான் எண்ணெய் சார்ந்த உற்பத்தியை மேற்கொள்ளவும், விற்பனை செய்யவும் அமெரிக்கா தடை விதித்திருந்தது. இந்தத் தடையை வருகிற ஆகஸ்ட் 21 வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அரசின் கருவூலத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நிர்வகிக்கும் கருவூலத் துறை இன்று வெளியிட்ட உத்தரவில், “ ஈரானிய கச்சா எண்ணெய் உற்பத்தி, விற்பனை மற்றும் போக்குவரத்து தொடர்பாக முன்பு தடை செய்யப்பட்டிருந்த அனைத்து பரிவர்த்தனைகளும் ஆகஸ்ட் 21, 2026 வரை அனுமதிக்கப்படுகின்றன” என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்தை வழங்க அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் ஈரான் உறுதியளித்துள்ளது. மேலும், சர்வதேச அணுசக்தி முகமையின் ஆய்வாளர்கள் தங்கள் நாட்டிற்குள் ஆய்வு செய்ய ஈரான் அனுமதி அளித்தது இந்தத் தடைகளைத் திரும்பப் பெறுவதற்கானக் காரணமாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தில் அமெரிக்க - ஈரான் அதிகாரிகளிடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இதில், ஒரு வெற்றிகரமான இறுதி ஒப்பந்தம் மேற்கொள்ள அடித்தளம் போடப்பட்டுள்ளதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ஈரானுக்கு தடை விலக்கப்பட்டுள்ளது.

Summary

US temporarily suspends sanctions on Iranian oil trade

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.