பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் தனது பதவியை இன்று ராஜிநாமா செய்தார்.
பிரிட்டன் பிரதமர் கியா் ஸ்டாா்மா் தனது அரசின் செல்வாக்கு சரிந்த நிலையில், அதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். மேலும், தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் அவர் பதவி விலகினார்.
இதன்மூலம், ஒரு தசாப்தத்திற்கும் சற்று அதிகமான காலத்திற்குள் பிரிட்டன் தனது 7-வது பிரதமரைப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான செயல்முறை ஜூலை மாதம் தொடங்கும் என்றும், அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை செப்டம்பர் மாதம் முதல் ஸ்டார்மர் பதவியில் நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
ராஜிநாமா முடிவு பற்றிப் பேசிய ஸ்டார்மர், “நான் எடுத்த அனைத்து முடிவுகளும் நான் நேசிக்கும் நாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதாகவே இருந்துள்ளது. அதனால், நான் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்.
அடுத்த பொதுத் தேர்தலில் நமது கட்சியை வழிநடத்த நான் பொருத்தமாக இருப்பேனா என்பதே கட்சி என் இப்போது எழுப்பும் கேள்வி. அந்தக் கேள்விக்கு நமது நாடாளுமன்ற கட்சி அளித்த பதிலை நான் கேட்டேன். அதனை, மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
ஸ்டார்மர் ராஜிநாமா செய்தது பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் தனது எக்ஸ் தளப் பதிவில், “வெறும் இரு ஆண்டுகளில் நீங்கள் எட்டிய இந்த நிலையை எட்ட தலைவர்களுக்கு பலருக்கும் பல ஆண்டுகள் எடுக்கும். உங்களால் ஐரோப்பிய மற்றும் உக்ரைனிய பாதுகாப்பு வலுப்பெற்றுள்ளது. நன்றி கியர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று பிரதமரான ஸ்டார்மர் (63), 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். ஆனால், அவர் மீதான நம்பகத்தன்மை அவரது தொடர்ச்சியான அதிகாரத் தவறுகளால் சிதைந்தன. அதே நேரத்தில், கொள்கை மாற்றங்கள் மற்றும் பொது அதிருப்தி காரணமாக இரு ஆண்டுகளில் அவரது தொழிலாளர் கட்சியின் செல்வாக்கு கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
கிரேட்டர் மான்செஸ்டரின் மேயரான ஆண்டி பர்ன்ஹாம் (56), கடந்த வாரம் மேக்கர்ஃபீல்டில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். ஸ்டார்மருக்குப் பின் தொழிலாளர் கட்சியின் தலைவர் மற்றும் பிரிட்டனின் பிரதமராக அவரே நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இன்று பதவியேற்கிறார்.
Summary
British Prime Minister Keir Starmer resigned from his post today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடரும் நெருக்கடி: சிலிகுரி திரிணமூல் மேயா் ராஜிநாமா; மற்றொரு மூத்த தலைவரும் விலகல்
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சா் திடீா் ராஜிநாமா
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

