ஈரான் எண்ணெய் மீதான வரிக்கு தற்காலிக விலக்கு அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர் நிறுத்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஈரான் மீது விதிக்கப்பட்ட அனைத்து தடைகளையும் நீக்க கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், எண்ணெய் மீதான தடைக்கு மட்டும் அமெரிக்கா தற்காலிக விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஈரானின் தஸ்நிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வாஷிங்டன் - தெஹ்ரான் இடையே இதற்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் இருந்து தற்போது நடந்த பேச்சுவார்த்தை முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில் ஈரானின் ஒட்டுமொத்த கோரிக்கைகளுக்கு இல்லையென்றாலும், குறிப்பிட்ட கோரிக்கைகளுக்கு வாஷிங்டன் செவிசாய்த்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகால ஒப்பந்தத்திற்கு வழிவகை ஏற்பட வேண்டுமென்றால், ஈரான் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்க வேண்டும் என ஈரான் தொடர்ந்து வலியுறுத்த உள்ளதாகவும் பேச்சுவார்த்தைக் குழுவில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் கீழ், வாஷிங்டன் அளிக்கும் உறுதிமொழிகளின் ஒரு பகுதியாக, நீக்கப்பட்ட தடைகளின் பட்டியல் இடம்பெற வேண்டும் என ஈரான் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வாஷிங்டன் - தெஹ்ரான் இடையிலான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டப்பட முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் எண்ணெய் மீதான தடைக்கு அமெரிக்கா அளித்துள்ள தற்காலிக விலக்கு, பேச்சுவார்த்தை முடிவை எட்டும் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
US offers temporary waiver of Iran oil sanctions in new negotiation text: Iranian media
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவிப்பு!

இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு!
போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்

அமெரிக்காவுடன் போர்நிறுத்தத்துக்கு ஈரான் ஒப்புக்கொண்டதா?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


