நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!

சூடானில் டிரோன் தாக்குதல்களில் இந்தாண்டு மட்டும் 1,000-கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது பற்றி...

News image

சூடான் துறைமுகத்தில் கடந்தாண்டு நடத்தப்பட்டத் தாக்குதல் - கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 9:21 pm IST

சூடான் மோதலில் டிரோன் தாக்குதல்களில் இந்தாண்டு மட்டும் 1,000-கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவப் படையான விரைவுப் படைக்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் மோதல் நடைபெற்று வருகின்றது. இதில், டிரோன் தாக்குதல்கள் மிகவும் தீவிரமானதாக மாறியுள்ளது.

டிரோன் தாக்குதல் காரணமாக இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து மட்டும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் உரையாற்றிய உயர் ஆணையர் வோல்கர் டர்க், “சூடானில் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், கொடூரமான மோதல் மற்றும் தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

இந்தாண்டு ஜனவரி முதல் மே வரையான டிரோன் தாக்குதல்களில் மட்டும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனை, நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். இதுமட்டுமின்றி, அங்கு பாலியல் வன்கொடுமைகளும், குற்றங்களும் அதிகரித்துள்ளன” என வருத்தம் தெரிவித்தார்.

சூடானில் மோதல் காரணமாக இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், 1.1 கோடிக்கும் மேலான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இது, உலகின் மிகப்பெரிய இடம்பெயர்வுகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் நிலையில் அங்கு பஞ்சமும் அதிகரித்துள்ளது.

Summary

Over 1,000 killed in drone attacks in Sudan!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.