லெபனான், சிரியா, காஸா பகுதிகளிலுள்ள இஸ்ரேல் ராணுவப் படைகளைத் திருமப் பெறமாட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையில் இருந்த தங்களது படைகளை அமெரிக்க ராணுவம் திரும்பப் பெற்றது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “ பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் நானும் ஒரு தெளிவான கொள்கையைப் பின்பற்றி வருகிறோம். அதன்படி, பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேலையும், இஸ்ரேல் மக்களையும் பாதுகாக்கும் விதமாக லெபானான், சிரியா, காஸா பகுதிகளின் பாதுகாப்பு மண்டலங்களில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அந்தப் பகுதிகளிலேயே காலவரையின்றி நிலைநிறுத்தப்படும்.
அந்தப் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் வெளியேற்றப்படுவார்கள். பொதுமக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்பட பயங்கரவாதிகள் இருக்கும் அனைத்துக் கட்டமைப்புகளும் அழிக்கப்படும்.
நிலப்பரப்பைத் தக்கவைப்பதும், பாதுகாப்பு மண்டலங்களைப் பராமரிப்பதும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் மிகப்பெரிய சாதனைகளில் அடங்கும். எனவே, லெபனானின் படைகளைத் திரும்பப் பெறுவதற்கு தற்போதுள்ள அல்லது வரவிருக்கும் அனைத்து அழுத்தங்களையும் நாங்கள் எதிர்ப்போம்" என்று காட்ஸ் தெரிவித்தார்.
மேலும், "இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் பாதுகாப்பில் நாங்கள் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டோம். அதேபோல, பாதுகாப்பு மண்டலங்களிலிருந்து பின்வாங்கவும் மாட்டோம்.
லெபனான் நடைபெறும் நிகழ்வுகளைக் காரணம் காட்டி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், எங்களின் முழு பலத்துடன் ஈரான் மீது நாங்கள் தாக்குதல் நடத்துவோம்” என்றும் அறிக்கையில் கூறியிருந்தார்.
இதுபற்றி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் நெதன்யாகு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர், மத்தியக் கிழக்கு போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுடன் அமெரிக்கா செய்துகொண்ட ஒப்பந்தத்தைக் கண்டித்ததோடு, இஸ்ரேலுக்கு அதில் உடன்பாடில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
Summary
We will not withdraw forces from Lebanon, Syria, and Gaza: Israel
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவிப்பு!

இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தமா? டொனால்ட் டிரம்ப் பதிவு!

இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு!
இஸ்ரேலும் ஈரானும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்துங்கள்: டொனால்ட் டிரம்ப்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


