அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வு பாகிஸ்தான் முன்னிலையில் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் என பாக். பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் தெரிவித்தார்.
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ளும் முடிவு இறுதியாகியுள்ளது. அமைதி ஒப்பந்தம் வருகிற ஜூன் 19 அன்று அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தான பிறகு, ஹோா்முஸ் நீரிணை திறக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார். மேலும், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் இருந்து அமெரிக்காவின் ராணுவப் படைகளைத் திரும்பப் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் கூறுகையில், “இது இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் மட்டுமல்ல. அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கான வெற்றி. இது வரலாற்றுரீதியான மைல்கல்.
கடினமான சூழ்நிலையில் கூட இரு நாட்டுத் தலைவர்களும் பொறுமையையும். விவேகத்தையும் கடைபிடித்ததால் உலகமே கொண்டாடும் இப்படியான முடிவு நமக்குக் கிடைத்துள்ளது. இன்றைய நாள் பாகிஸ்தானில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுமுள்ள பாகிஸ்தானியர்களுக்கும் பெருமைக்குரிய நாள்.
இந்த அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்படும் பொருளாதார நன்மைகளை அனைத்து பாகிஸ்தானியர்களுக்கும் நமது அரசு கொண்டு சேர்ப்போம் என்று உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதி ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியதில் பாகிஸ்தான் முக்கியப் பங்கு வகித்ததாகத் தெரிவித்த அவர், பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் சார்பில் முக்கிய உறுப்பினராக பங்காற்றிய அதிகாரி ஆசீம் மூனீரைப் பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து, அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வை பாகிஸ்தான் முன்னெடுத்து நடத்தும் என்றும், ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இந்நிகழ்வு நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Summary
US-Iran peace agreement to be signed in Switzerland: Pakistan PM
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
எனக்குப் பிடிக்கவில்லை என்றால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


