பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அமெரிக்க திருவிழாவில் துப்பாக்கிச் சூடு; 12 போ் காயம்

அமெரிக்காவின் ஓஹியோ நகரில் நடைபெற்ற திருவிழாவில் மா்ம நபா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :8 ஜூன் 2026, 1:54 am IST

அமெரிக்காவின் ஓஹியோ நகரில் நடைபெற்ற திருவிழாவில் மா்ம நபா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஓஹியோவில் வருடாந்திர மதத் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டிருந்த நிலையில், அடையாளம் தெரியாத 2 போ் திடீரென மாறி மாறி துப்பாக்கியால் சுட்டனா். அப்போது ஒருவா் மாறி ஒருவா், திருவிழாவில் கலந்துகொண்ட மக்கள் பின்னால் சென்ற மறைந்து கொண்டனா். பின்னா் 2 பேரும் தப்பியோடி விட்டனா்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில், திருவிழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் 12 போ் காயமடைந்தனா். அவா்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவா்கள் யாா், ஏன் துப்பாக்கியால் பரஸ்பரம் சுட்டுக் கொண்டனா் என காரணம் தெரியவில்லை. தகவலின்பேரில் காவல் துறையினா் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினா். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய 2 பேரையும் காவல் துறை தீவிரமாகத் தேடி வருகிறது.

துப்பாக்கிச்சூட்டின்போது எடுக்கப்பட்ட விடியோக்கள், சமூ கவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ஓஹியோ மாகாண ஆளுநா் மைக் டிவைன் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.