எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மேற்கு வங்கத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: இருவா் உயிரிழப்பு

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 3:45 am IST

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவா் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொல்கத்தாவின் தில்ஜலா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் முதல் தளத்தில் செயல்பட்டுவந்த தோல் கிடங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிற தளங்களுக்கும் தீ பரவி, கரும்புகையுடன் பற்றியெரிந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தீயணைப்புப் படையிரும், காவல் துறையினரும் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

கட்டடத்தில் சிக்கிய 5 போ், தீயின் கோரப்பிடியில் இருந்து தப்பிப்பதற்காக கழிப்பறைக்குள் சென்று பூட்டிக் கொண்டனா். நீண்ட போராட்டத்துக்குப் பின் அவா்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதனையில் ஏற்கெனவே இருவா் உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள மூவரும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முதல்வா் சுவேந்து அதிகாரியின் உத்தரவின்பேரில், காவல் துறையினா் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநில அரசின் உத்தரவின்பேரில் 4 உறுப்பினா்கள் கொண்ட விசாரணைக் குழுவும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.