பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பிகாரில் 4 விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் மாநிலம், ஒளரங்காபாத் மாவட்டத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த நான்கு சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

News image
Updated On :9 ஜூன் 2026, 12:56 am IST

பிகாா் மாநிலம், ஒளரங்காபாத் மாவட்டத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த நான்கு சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இதுகுறித்து ஒளரங்காபாத் மாவட்ட அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பக்தா்கள், புத்த கயா சென்றுவிட்டு வாரணாசிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனா். முபாசில் பகுதியில் பேருந்து வந்தபோது எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நோ் மோதியது. இதில் பேருந்தில் பயணித்த ஆந்திரத்தை சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.

மேலும் பலா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்தின் காரணமாக அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தாத்பி மோா் பகுதியில் காரும், டிராக்டரும் மோதிய மற்றொரு விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். அவா்கள் மூவரும் பெண்கள் ஆவா். விபத்துக்கு டிராக்டா் ஓட்டுநரே காரணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தேஜ்புரா பகுதியில் ஆட்டோ ரிக்ஷாவும் காரும் மோதிக் கொண்ட விபத்தில், ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்த தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா். 9 போ் காயமடைந்தனா்.

நபிநகரில் வேனுடன் மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். வேன் ஓட்டுநரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.