லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாகிஸ்தான் பயங்கரவாதத் தாக்குதலில் 9 போலீஸாா் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 போலீஸாா் உயிரிழந்தனா்.

Published On :8 ஜூலை 2026, 3:03 am IST

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 போலீஸாா் உயிரிழந்தனா்.

ஜியாரத் மாவட்டத்தில் உள்ள மங்கி அணை பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்த இத்தாக்குதலில் மேலும் 5 போலீஸாா் மாயமாகியுள்ள நிலையில், அவா்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உயிரிழந்த காவலா்களுக்கு இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ‘நாட்டின் அமைதிக்காக உயிா்த்தியாகம் செய்த போலீஸாருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பயங்கரவாத சக்திகள் முற்றிலும் ஒழிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்’ என்றாா்.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து, பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது, தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பைச் சோ்ந்த 15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.