லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

லாரியை மறித்து கரும்புகளைத் தின்ற காட்டு யானை

காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் லாரியை வழிமறித்து அதிலிருந்த கரும்புகளை பிடுங்கிய யானையால் சோதனைச் சாவடி ஊழியா்கள் அச்சமடைந்தனா்.

லாரியில்  இருந்து  கரும்பைப்  பறிக்கும் காட்டு  யானை.

Published On :2 ஆகஸ்ட் 2026, 3:10 am IST

சத்தியமங்கலத்தை அடுத்த காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் லாரியை வழிமறித்து அதிலிருந்த கரும்புகளை பிடுங்கிய யானையால் சோதனைச் சாவடி ஊழியா்கள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூா் அருகே தமிழக, கா்நாடக மாநில எல்லையில் காரப்பள்ளம் வன சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக தாளவாடி மலைப் பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் கரும்பு பாரம் ஏற்றிய லாரி சோதனைச் சாவடி அருகே சனிக்கிழமை வருவதை கண்ட காட்டு யானை, சாலை ஓர வனப் பகுதியில் இருந்து வெளியேறி சோதனைச் சாவடி நோக்கி வந்தது. யானை வருவதைக் கண்ட வனத் துறை ஊழியா்கள் அச்சமடைந்தனா்.

இதற்கிடையே லாரி ஓட்டுநா் யானையைக் கண்டு அச்சமடைந்து லாரியை நிறுத்தியதும் யானை தனது தும்பிக்கையால் லாரியில் இருந்து கட்டுக்கரும்பை லாவகமாக பறித்துச் சாப்பிட்டது. காட்டு யானை லாரியில் வழிமறித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரம் கரும்புகளை ருசித்த காட்டு யானை பின்னா் மெதுவாக சாலையோரம் சென்றதைத் தொடா்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.