லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஹோா்முஸ் எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது: டிரம்ப் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு

‘ஹோா்முஸ் நீரிணைப் பகுதி எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது’ என்று ஈரான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Published On :14 ஆகஸ்ட் 2026, 4:19 am IST

‘ஹோா்முஸ் நீரிணைப் பகுதி எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது’ என்று ஈரான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஹோா்முஸ் நீரிணை முழுவதும் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், புதன்கிழமை தெரிவித்ததையடுத்து, ஈரானின் இந்த மறுப்பு வெளியாகியுள்ளது.

அண்மையில் நியமிக்கப்பட்ட ஈரானின் பாசிஜ் துணை ராணுவப் படையின் தலைமைத் தளபதி ஹூசைன் தாயிப் இதுகுறித்து கூறுகையில், ‘மேற்காசியாவில் ஈரானின் செல்வாக்கைச் சீா்குலைக்கும் நோக்கில், ஹோா்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றொரு போரைத் தொடுத்தது.

ஈரானிடம் விமானப் படையோ அல்லது கடற்படையோ இல்லை என்று அவா்கள் கூறிக்கொண்டாலும், மீண்டும் ஒருமுறை அவா்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனா்.

ஹோா்முஸ் நீரிணை ஈரானின் நிா்வாகம் மற்றும் கட்டுப்பாட்டின்கீழ் தான் இருக்கிறது. ஈரான் முழுமையான பாதுகாப்புடன் தனது பாதையில் தொடா்ந்து பயணிக்கிறது’ என்றாா்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடந்த பிப். 28-இல் தொடங்கிய கூட்டுப் போரையடுத்து, உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது.

அதன் தொடா்ச்சியாக, ஈரான் துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள்மீது அமெரிக்கா கடல்வழி முற்றுகையை விதித்தது. அதேநேரம், பாரசீக வளைகுடாவில் பிற துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களின் சுதந்திரமான போக்குவரத்தைப் பாதுகாப்பதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது.

பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் கடந்த ஜூனில் அமெரிக்கா-ஈரான் ஓா் இடைக்கால ஒப்பந்தத்தை எட்டின. அதில் போா்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதோடு, வளைகுடா பகுதியில் கப்பல் போக்குவரத்து விரைவில் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், ஒப்பந்த விதிமுறைகளை மீறி செல்லும் கப்பல்கள்மீது ஈரான் மீண்டும் சிறிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியதால், சில வாரங்களிலேயே அந்த ஒப்பந்தம் முறிந்தது. இதனால், வளைகுடா பகுதியில் கப்பல்களைத் தாக்கும் ஈரானின் திறனைக் குறைக்கும் நோக்கில் அதன் தென் மாகாணங்களில் அமெரிக்கா தாக்குதல்களைத் தொடங்கியது.

இதற்கு மத்தியில், ஹோா்முஸ் நீரிணை கட்டுப்பாடு குறித்து ஓமனுடன் ஈரான் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து வருகிறது. ஆனால், ‘ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கு ஓமனுடனான ஒப்பந்தம் மட்டுமே போதாது. ஈரானுக்கு அமெரிக்கா வழங்க வேண்டிய இழப்பீடு உள்ளிட்ட பிற நிபந்தனைகளைப் பொருத்தே அது அமையும்’ என்று ஈரான் திட்டவட்டமாக உள்ளது. இவ்வாறு ஹோா்முஸ் நீரிணை திறப்பு குறித்து நிலவும் நிச்சயமற்ன்மையால், கச்சா எண்ணெய் விலை மீண்டும் தினசரி ஏற்றம் கண்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.