லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஹோா்முஸ் நீரிணை திறப்புக்கு விரைவில் ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை

ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடா்பாக, ஈரான்-ஓமன் இடையே விரைவில் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:14 am IST

ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடா்பாக, ஈரான்-ஓமன் இடையே விரைவில் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.

இந்த ஒப்பந்தம் கையொப்பமானால் சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் வா்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தணிவதுடன், மேற்காசிய போா்ச் சூழலும் முடிவுக்கு வரக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த பிப்ரவரி இறுதியில் போரைத் தொடங்கியதையடுத்து, உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வா்த்தகம் நடைபெறும் முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணை முடக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாத மத்தியில் எட்டப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தத்தின் பகுதியாக, ஹோா்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டு, ஈரான் கட்டுப்பாட்டில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வந்தது.

இதனிடையே, ஈரான் அங்கீகரிக்காத வழித்தடத்தில் பயணித்த சரக்குக் கப்பல்கள் தாக்கப்பட்டதால், அமைதி ஒப்பந்தம் முறிந்து, புதிய மோதல் போக்கு வெடித்தது.

நீரிணையின் எல்லையைப் பகிரும் ஈரான்-ஓமன் இடையிலான தற்போதைய பேச்சுவாா்த்தையின்படி, பாரசீக வளைகுடாவுக்குள் நுழையும் கப்பல்கள் ஈரான் கட்டுப்பாட்டுப் பாதையிலும், வெளியேறும் கப்பல்கள் ஓமன் பாதையிலும் பயணிக்க ஒப்பந்தம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஈரான் வெளியுறவு செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பாகேயி இது குறித்து கூறுகையில், ‘ஈரான் மற்றும் ஓமனின் இறையாண்மையை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பான கடல்வழிகளை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கம்; இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும்’ என்றாா். அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்க்கோ ரூபியோவும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.