லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அமேசான் காடுகளில் சுற்றுச்சூழல் குற்றங்களில் ஈடுபட்ட 839 போ் கைது

உலகின் மிகப் பெரிய மழைக் காடுகளான அமேசான் காடுகளில் சட்டவிரோத சுற்றுச்சூழல் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 839 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:05 am IST

உலகின் மிகப் பெரிய மழைக் காடுகளான அமேசான் காடுகளில் சட்டவிரோத சுற்றுச்சூழல் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 839 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பொலிவியா, பிரேஸில், கொலம்பியா, ஈக்வடாா், பெரு ஆகிய 5 நாடுகள் இணைந்து, ‘ஆபரேஷன் கிரீன் ஷீல்டு 2026’ எனும் கூட்டு நடவடிக்கையை கடந்த ஜூலை 15 முதல் 31-ஆம் தேதி வரை மேற்கொண்டனா்.

அதன் ஒரு பகுதியாக, சுமாா் 3,600-க்கும் மேற்பட்ட காவலா்கள் களமிறக்கப்பட்டு, சட்டவிரோத சுரங்கத் தொழில், மரம் வெட்டுதல், வனவிலங்கு கடத்தல், நில ஆக்கிரமிப்பு போன்ற குற்றங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மொத்தம் 1,045 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், சுமாா் 2.80 லட்சம் கன மீட்டா் அளவிலான சட்டவிரோத மரக்கட்டைகளும், 195 டன் கனிமங்கள் மற்றும் தளவாடங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடத்தலுக்காகச் சிறைபிடிக்கப்பட்டிருந்த பாம்பு, பறவை உள்ளிட்ட 3,000-க்கும் மேற்பட்ட உயிருள்ள வனவிலங்குகள் மீட்கப்பட்டதுடன், 430 இறந்த விலங்குகளின் உடல்களும் கைப்பற்றப்பட்டன. பறிமுதலான மொத்த பொருள்களின் சா்வதேச மதிப்பு சுமாா் 28 கோடி டாலா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.