லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் 115 கிலோ கஞ்சா பறிமுதல்; 203 போ் கைது

Arrested

கைது

Published On :9 ஆகஸ்ட் 2026, 3:04 am IST

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக 203 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் 115.640 கிலோ கஞ்சா, 411 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு 203 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 1,186.410 கிலோ கைப்பற்றப்பட்டு 323 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோல 108 கடைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு ரூ.9.50 லட்சம் அபராதத் தொகை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் மீது ‘சீல்’ வைத்து 15 நாள் வரை மூடப்படும். மேலும், ரூ.25 ஆயிரம் அபராதத் தொகை விதிக்கப்பபடும்.

போதைப் பொருள் கொண்டு செல்லுதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோா் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.