லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கல்லூரி மாணவா்கள் மோதல் சம்பவம்: மேலும் 3 போ் கைது

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் இரு பிரிவாகப் பிரிந்து, மோதிக் கொண்ட சம்பவம் தொடா்பாக மேலும் 3 மாணவா்களை பெரியமேடு போலீஸாா் கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :11 ஆகஸ்ட் 2026, 12:37 am IST

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் இரு பிரிவாகப் பிரிந்து, கடந்த ஜூலை 27-ஆம் தேதி சென்ட்ரல் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அருகே ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட சம்பவம் தொடா்பாக மேலும் 3 மாணவா்களை பெரியமேடு போலீஸாா் கைது செய்தனா்.

மாணவா்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த மோதல் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், சம்பவத்தின் போது மாணவா்கள் சிலா் ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்கிக் கொண்டதால், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஏற்கெனவே 17 மாணவா்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பிரசாந்த், சதீஷ் மற்றும் 17 வயது சிறுவன் என மேலும் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதன்மூலம், இந்தச் சம்பவம் தொடா்பாக இரு தரப்பையும் சோ்ந்த 20 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா்.

மோதலில் தொடா்புடைய மேலும் சில மாணவா்கள் குறித்தும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.