ஈரான் தலைநகர் தெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வணிக விமானச் சேவைகள் மீண்டும் இன்று (ஏப். 25) முதல் தொடங்கியது.
அமெரிக்கா - இஸ்ரேலிய படைகள் கூட்டாக இணைந்து கடந்த பிப். 28 அன்று ஈரானின் மீது தாக்குதல்கள் மேற்கொண்டன. இதையடுத்து, இருதரப்புக்கும் இடையில் போர் தொடங்கியதால், ஈரானின் வான்வெளிப் பாதைகள் முழுவதுமாக முடக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், ஈரானுக்கும் பிற நாடுகளுக்கும் இடையேயான சர்வதேச போக்குவரத்துக்கான நடவடிக்கைகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.
சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக தெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வணிக விமான சேவைகளை ஈரான் மீண்டும் தொடங்கியது.
தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல், ஓமன் தலைநகர் மஸ்கட் மற்றும் சௌதி நகரமான மதீனா ஆகிய இடங்களுக்கு விமானங்கள் புறப்பட்டுச் சென்றதாக ஈரானின் அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
விமானங்களைக் கண்காணிக்கும் தளமான Flightradar24-இன் தரவுகளின்படி, இன்று காலையில் இஸ்தான்புல் நோக்கி மூன்று விமானங்கள் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவுடனான போர்நிறுத்தத்தின் மத்தியில், ஈரான் இந்த மாதத் தொடக்கத்தில் தனது வான்வெளியைப் பகுதியளவு மீண்டும் திறந்தது. இந்தப் போர்நிறுத்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டையை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Iran resumed commercial flights from Tehran's international airport on Saturday for the first time since the conflict with the US and Israel began about two months ago.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால்..! - ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! - ஈரான் அறிவிப்பு!
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


