ஜொ்மனி தலைநகா் பொ்லினில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரானின் இளவரசா் ரேசா பஹ்லவி மீது சிவப்பு நிற திரவம் ஊற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் 1979-இல் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு அந்நாட்டின் மன்னராக இருந்த முகமது ரேசா ஷா பஹ்லவி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டாா். அவரது மகனான 65 வயது ரேசா பஹ்லவி கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறாா்.
ஈரானில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்சி எதிா்ப்புப் போரட்டத்தின் பின்னணியில், தற்போது மீண்டும் அந்நாட்டு அரசியலில் பங்காற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாா்.
இந்நிலையில், அமெரிக்கா-ஈரான் போா்நிறுத்தத்தை விமா்சித்து, பொ்லினில் செய்தியாளா் சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
தொடா்ந்து, ரேசா பஹ்லவி தனது ஆதரவாளா்களை நோக்கி கையசைத்தபடி காரில் ஏறிச் சென்றாா். இத்தாக்குதலில் ஈடுபட்ட நபரை ஜொ்மனி காவல்துறையினா் உடனடியாகக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
முன்னதாக, செய்தியாளா்களிடம் பேசிய ரேசா பஹ்லவி, ‘கடந்த இரு வாரங்களில் மட்டும் ஈரானில் 19 அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரான் அரசுடனான ராஜீய முயற்சிகள் பலனளிக்காது; அந்நாட்டின் மக்களாட்சி போராட்டத்துக்கு உலக நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்’ என வலியுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாமக நிா்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 சிறாா்கள் மீது வழக்குப் பதிவு

கொட்டாவி விடும்போது மூளையில் என்ன நடக்கும்? ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

கடனைத் திருப்பித் தராதவா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: வியாபாரி உள்பட இருவா் கைது

ஜப்பான் கடற்பகுதியை நோக்கி வடகொரியா ஏவுகணை வீச்சு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

