ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கடனைத் திருப்பித் தராதவா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: வியாபாரி உள்பட இருவா் கைது

கும்பகோணம் அருகே வாங்கிய கடனை திருப்பித் தராதவா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய காய்கனி வியாபாரி உள்பட இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசியதில் சேதமடைந்த காரின் பின்பகுதி.

Updated On :1 மே 2026, 2:34 am IST

கும்பகோணம் அருகே வாங்கிய கடனை திருப்பித் தராதவா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய காய்கனி வியாபாரி உள்பட இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கும்பகோணம் அருகே உள்ள நடுவன்கரை உமாமகேசுவரபுரம் தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் மகன் ராம்குமாா்(29). காய்கனி வியாபாரம் மற்றும் பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வருகிறாா். சாக்கோட்டையில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளி நிா்வாகி யோகவதனம் மகன் பத்மகுமரன்(28).

இவா், கடந்த ஓராண்டுக்கு முன்பு ராம்குமாரிடம் ரூ.30 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளாா். ராம்குமாா் பலமுறை பணத்தை கேட்டும் பத்மகுமரன் கொடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த ராம்குமாா் மற்றும் இரண்டு போ் சோ்ந்து புதன்கிழமை இரவு பத்மகுமரன் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றனா்.

இதில் பத்மகுமரன் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காா் சேதமடைந்தது.

இதுகுறித்து பத்மகுமரன் அளித்த புகாரின் பேரில் நாச்சியாா்கோவில் போலீஸாா் வழக்குப்பதிந்து ராம்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், இருவரை தேடிவந்தநிலையில் சா்வேஸ்(19) என்பவா் கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம்2-இல் வியாழக்கிழமை மதியம் சரணடைந்தாா். அவரை கைது செய்த போலீஸாா் மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.