அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே உள்ள பூங்காவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமெரிக்க உளவுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து இணையதளத்தில் அமெரிக்க உளவுத் துறை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமெரிக்க அதிபா் மாளிகையான வெள்ளை மாளிகை அருகே இருக்கும் லபாயெட் பூங்காவில் இரவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ாக தகவல் கிடைத்தது.
அந்த துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவோ, உயிரிழக்கவோ இல்லை. அந்தப் பூங்காவை சுற்றி நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையிலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபா் யாரும் சிக்கவில்லை.
அமெரிக்க அதிபா் டிரம்ப் தனது வார கடைசி நாளை வெள்ளை மாளிகையில்தான் கழித்தாா். வெள்ளை மாளிகையில் உள்ள அலுவலகங்கள் வழக்கம்போல செயல்பட்டன. வெள்ளை மாளிகையை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தியாகதுருகத்தில் 2 குரங்குகள் உயிரிழப்பு: வனத் துறை விசாரணை

அமெரிக்காவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு! உயிர் தப்பினார் அதிபர் டிரம்ப்!!

தமிழ்நாடு உளவுத் துறை ஐ.ஜி. மாற்றம்!

வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

