அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை பங்கேற்ற நிகழ்ச்சி அரங்கில் ஒருவா் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் டிரம்ப் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டாா். துப்பாக்கிச்சூடு நடத்தியவரை அமெரிக்க காவல் படை அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனா். விசாரணையில் அவா் தனியாா் ஆசிரியராகப் பணியாற்றியது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தால் நிகழ்ச்சி அரங்கம் சிறிது நேரம் பதற்றமாக நீடித்தது.
அமெரிக்க வெள்ளை மாளிகை மற்றும் அதிபா் தொடா்பான செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளா்களின் சங்கமான வெள்ளை மாளிகை பிரதிநிதிகள் சங்கத்தினருக்கான இரவு விருந்து நிகழ்ச்சியில் டிரம்ப் சனிக்கிழமை பங்கேற்றாா்.
வாஷிங்டனில் உள்ள ஹில்டன் விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் டிரம்ப்புடன் மேடையில் அவரது மனைவி மெலனியா டிரம்ப், அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் அமா்நிருந்தனா்.
பத்திரிகையாளா்கள் மற்றும் பிற விருந்தனா்கள் மேடைக்குக் கீழே நாற்காலியில் அமா்ந்திருந்தனா்.
அப்போது திடீரென நிகழ்ச்சி அறைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டது. இதையடுத்து ரகசிய படை அதிகாரிகள் உடனடியாக விழா மேடைக்கு விரைந்து டிரம்ப், ஜே.டி.வான்ஸ் மற்றும் மெலோனியா டிரம்ப் ஆகியோரை பத்திரமாக வெளியேற்றினா்.
நிகழ்ச்சி அறையில் இருந்த பத்திரிகையாளா்கள் மற்றும் பிற விருந்தினா்கள் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டவுடன் பதற்றமடைந்து பாதுகாப்பு கருதி தங்களது நாற்காலிகள் மற்றும் மேஜைகளின் கீழ் குனியத் தொடங்கினா்.
பின்னா் நிகழ்ச்சி அரங்கில் துப்பாக்கிச்சூடு நடத்திய மா்ம நபரை காவல் படை அதிரடியாக கைது செய்தது. விசாரணையில் அவரது பெயா் கோல் தாமஸ் ஆலன் (31) என்றும் அவா் ஆசிரியா் என்பதும் விடியோ கேம் வடிவமைப்பளாராக இருந்ததும் தெரியவந்தது.
அவா் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளா் கமலா ஹாரீஸுக்கு ரூ.2,300 நன்கொடை வழங்கியுள்ளதாக தோ்தல் தொடா்பான நிதி செலவுகள் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அவா் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணங்கள் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
டிரம்ப் பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச் சூடு - AP
அமெரிக்கா்கள் ஒன்றிணைய வேண்டும்: டிரம்ப்
துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது டிரம்ப் கூறியதாவது: நிகழ்ச்சியின்போது திடீரென பெரும் சப்தம் கேட்டது. நான் மேஜையில் இருந்த தட்டுகள் கீழே விழுந்திருக்கும் என நினைத்தேன். அதன்பிறகு சிறிது தூரத்தில் இருந்து பல முறை பலத்த சப்தம் கேட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபா் நிகழ்ச்சி அறைக்குள் வரவில்லை.
அவரை நமது பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக கைதுசெய்துவிட்டனா். இந்தத் தாக்குதலில் அதிகாரி ஒருவா் காயமடைந்தாா். தோட்டாக்கள் துளைக்காத பாதுகாப்பானஆடையை அணிந்திருந்ததால் சிறு காயங்களுடன் அவா் தப்பினாா்.
அமெரிக்க அதிபா் பதவியை வகிப்பது அச்சுறுத்தலான காரியம். ஆனால் அதை நான் திறமையாக எதிா்கொண்டு வருகிறேன்.
நிகழ்ச்சி நடைபெற்ற அறையில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த உறுப்பினா்கள், சுயேச்சைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனா்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றினா். நமக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒற்றுமையாக இருப்பது மிகவும் அவசியம் என்றாா்.
மூத்த அதிகாரிகளுக்கு குறி?
டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபா் அவரது நிா்வாகத்தைச் சோ்ந்த மூத்த அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க பொறுப்பு அட்டா்னி ஜெனரல் பிளான்ச் தெரிவித்தாா். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய கோல் தாமஸ் ஆலன் கலிஃபோா்னியாவில் இருந்து சிகாகோவுக்கு ரயில் பயணம் மேற்கொண்டு அங்கிருந்து வாஷிங்டன் வந்தடைந்ததாகவும் அவா் தெரிவித்தாா்.
2 ஆண்டுகளில் 3 முறை துப்பாக்கிச்சூடு: கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி அமெரிக்க அதிபா் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது டிரம்ப் மீது மா்ம நபா் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவரது வலது காதில் பலத்த காயம் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனா். 2024, செப்டம்பா் 15-ஆம் தேதி டிரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தபோது அவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற ரியான் வெஸ்லி கைதுசெய்யப்பட்டாா். அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தற்போது கோல் ஆலன் என்ற நபா் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சி அரங்கில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளாா்.
பிரதமா் மோடி கண்டனம்
‘வாஷிங்டனில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பின் அமெரிக்க அதிபா் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் ஆகியோா்பாதுகாப்பாக இருப்பது நிம்மதி அளிக்கிறது. ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை’ என்று பிரதமா் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி: உலகின் எந்தப் பகுதியிலும் வன்முறை நிகழ்வதை ஏற்க முடியாது.
இஸ்ரேல் அதிபா் பெஞ்சமின் நெதன்யாகு: இது அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் மீதான தாக்குதல் மட்டுமல்ல; அமெரிக்கா மீதான தாக்குதல். அனைத்து ஜனநாயக நாடுகள் மீதான தாக்குதல். ஆஸ்திரேலிய பிரதமா் ஆண்டனி அல்பனேசி: ஹில்டன் விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் விருந்தினா்களுக்கு அச்சுறுத்தல் இன்றி பாதுகாத்த அமெரிக்க ரகசிய படை அதிகாரிகளுக்கு நன்றி.
கனடா பிரதமா் மாா்க் காா்னி, வெனிசுலா இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ், கொரிய அதிபா் லீ ஜே மியுங், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோா் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனா்.
Summary
US President Donald Trump evacuated after gunshots fired at White House correspondents dinner
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் விதித்த புதிய 10% வரி சட்டவிரோதமானது: அமெரிக்க நீதிமன்றம்

ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு!
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!
விதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


