நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

14 மைல்கள் நடந்தே வந்து பணி செய்த ஹோட்டல் பெண் ஊழியருக்கு கிடைத்த பம்பர் பரிசு!

பெயர் வெளியிடாத தம்பதியினர் டெக்சாஸில் உள்ள ஹோட்டல் பணியாளர் ஒருவருக்கு புதுக் காரை பரிசளித்துள்ளனர்.

News image
Updated On :8 டிசம்பர் 2019, 1:10 pm IST

பெயர் வெளியிடாத தம்பதியினர் டெக்சாஸில் உள்ள ஹோட்டல் பணியாளர் ஒருவருக்கு புதுக் காரை பரிசளித்துள்ளனர். தினமும் வேலைக்குச் செல்வதற்காக 14 மைல் நடந்து வரும் அவரது நிலையைப் பார்த்து, காரை அன்புப் பரிசாக அனுப்பி வைத்த நிகழ்ச்சி அண்மையில் நடந்துள்ளது.

கால்வெஸ்டனில் உள்ள டென்னிஸ் டைனர் என்ற ஹோட்டலில் பணிபுரிந்து வருபவர் அட்ரியன்னா எட்வர்ட்ஸ். இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில்: 'நான் இன்னும் கனவிலிருந்து மீண்டு வரவில்லை. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, நான் என் ஜன்னலை எட்டிப் பார்க்கிறேன்.  வெளியே அந்தக்  கார் அங்குதான் இருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துக் கொள்கிறேன்’என்றார்.

அன்று அட்ரியன்னா எட்வர்ட்ஸ் வழக்கம் போல் வேலைக்கு வந்தபோது, காலை உணவுக்காக தனது பிரிவில் ஒரு தம்பதியினர் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவர்களுக்கு உணவு பறிமாறியுள்ளார். பேச்சினூடே தான் கார் வாங்குவதற்காக பணம் சேமித்துக் கொண்டிருப்பதையும், தினமும் நான்கு மணி நேரம் வீட்டிலிருந்து நடந்துதான் வேலைக்கு வருவதையும் பகிர்ந்துள்ளார்.  நெடுந்தொலை நடந்து வந்துதான் எட்வர்ட்ஸ் காருக்கான பணத்தை சேர்த்து வருகிறார் என்பதை அத்தம்பதியர் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

Story image

அதன் பின் அந்தத் தம்பதி உணவுக்கான பணத்தைச் செலுத்திவிட்டு கிளம்பிச் சென்றனர்.  சில மணி நேரத்துக்குப் பிறகு '2011 நிசான் சென்ட்ரா' கார்ச் சாவியுடன் 'கிளாசிக் கால்வெஸ்டன் ஆட்டோ குழுமத்தின்’ பணியாளர் ஒருவர் எட்வர்ட்ஸை அணுகினார். இது உங்களுக்காக இன்று காலை உணவருந்திய தம்பதியர் பரிசளித்தது என்று சொன்ன நொடியில் சந்தோஷத்தில் வாயடைத்து திக்கு முக்காடிவிட்டார் எட்வர்ட்ஸ்.  ஆனால் காரை பரிசளித்த தம்பதி தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை என்றும் அவர்களது ஒரே நிபந்தனை எட்வர்ட்ஸ் எப்போதும் போல கனிவுடன் அனைவரிடமும் பழக வேண்டும் என்பது மட்டுமே என்று கார் நிறுவனப் பணியாளர் கூறினார்.

Story image

மனம் நெகிழ்ந்த எட்வர்ட்ஸ், ’நான் ஒரு நாள் பொருளாதாரரீதியாக நல்ல நிலைக்கு வந்தால், நிச்சயம் தேவைப்படுவோர்களுக்கு உதவுவேன்.’ என்றார். முன்பு வீட்டிலிருந்து ஹோட்டலுக்கு வர நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஆன நிலையில் தற்போது எட்வர்ட்ஸ் புதுக் காரில் ஜம்மென்று அரை மணி நேரத்தில் வேலைக்கு வந்துவிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.