'நீங்கள் ஷாப்பிங் செய்யுங்கள். நாங்கள் பொருள்களைக் கொண்டு வர உங்களோடு வருகிறோம்'' என்று விளம்பர வாக்கியத்துடன் செயல்படும் தில்லியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றின் செயல்பாடு மக்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது.'கேரிமேன்' எனும் இந்த வசதியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
ரயில் நிலையங்களில் பெட்டிகளுடன் பயணிகள் இறங்கியவுடன் அவர்களை போர்ட்டர்கள் சூழ்வார்கள். அதுபோல், ஷாப்பிங் செய்யும்போது, வாங்கிய பொருள்களை வாகனங்களில் ஏற்ற பொருள்களை டிராலியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வருவதும் சிரமமான வேலையாகும். அதனால் மால்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் வாங்கும் பொருள்களை வாகனங்கள் நிற்கும் இடம் வரை கொண்டு செல்ல 'கேரிமேன்' வசதியை 'ஸ்டார்ட் அப்' நிறுவனம் ஒன்று தில்லியில் தொடங்கியுள்ளது.
நமக்கு பொருள்களைத் தூக்க அல்லது தள்ள உதவி தேவைப்பட்டால் அந்த நிறுவனத்தில் சொன்னால் போதும், உதவிக்கு ஒரு ஆளை அனுப்பிவைப்பார்கள்.
'மக்கள் ஷாப்பிங்கை விரும்புகின்றனர். ஆனால், பொருள்களை உரிய இடத்துக்குக் கொண்டு வருவதில் உடல் ரீதியான சிரமத்தை மக்கள் வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். ஷாப்பிங் பொருள்களைக் கொண்டு வருவதில் உள்ள பிரச்னைகளுக்கு விடுதலை தரவே 'கேரிமேன்' வசதியை அறிமுகப்படுத்தினோம்.
வாங்கிய பொருள்களைக் கையாளுவதற்கு மணி ஒன்றக்கு ரூ.149 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தூக்கிச் செல்ல வேண்டிய ஷாப்பிங் தொடக்கத்திலிருந்தே 'கேரிமேன்' உடனிருப்பார். இந்த உதவியாளர், ஷாப்பிங் பைகளைச் சுமக்கவும், கடைகளுக்கு வழிகாட்டவும், உணவு வரிசைகளில் காத்திருக்கவும், வாடிக்கையாளர்களுக்கு வாகன நிறுத்துமிடங்கள் அல்லது மெட்ரோ வாயில்கள் வரை பொருள்களைக் கொண்டு வந்து தருவதற்கும் உதவுவார். ஒரு கேரிமேன் 12 கிலோ எடையுள்ள பொருள்களைத் தூக்கலாம். இதற்கு அதிகமான பொருள்களைத் தூக்க இன்னொரு கேரிமேனை வாடகைக்கு அழைக்கவேண்டும்'' என்கின்றனர் அந்த நிறுவனத்தினர்.
-சக்ரவர்த்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்: அமைச்சர் கீர்த்தனா அழைப்பு!
வருகிறது கேரிமேன் சேவை! இனி ஷாப்பிங் செல்ல கவலையில்லை!

தில்லியில் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து: 9 போ் மருத்துவமனையில் அனுமதி

ஈரோட்டில் அதிமுக அலுவலகத்துக்கு புதிய மாவட்டச் செயலாளா் பூட்டு போட்டதால் பரபரப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
