தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

வருகிறது கேரிமேன் சேவை! இனி ஷாப்பிங் செல்ல கவலையில்லை!

கேரிமேன் சேவை ஒன்று அறிமுகமாகிறது, இதனால் பெண்கள் இனி ஷாப்பிங் செல்ல கவலையில்லை எனக் கூறப்படுவது பற்றி..

News image

ஷாப்பிங் செல்ல - AP

Updated On :22 மே 2026, 1:48 pm IST

தில்லியில், இளைஞர் ஒருவர் கேரிமேன் என்ற புத்தாக்க நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். ஷாப்பிங் செல்லும் பெண்களின் உடைமைகளை தூக்கி வருவதற்கு பயிற்சி பெற்ற நபர்களின் சேவையைப் பெற்றுக் கொள்ள இந்த நிறுவனம் வழிவகை செய்கிறது.

இது பற்றி ஊடகங்கள் சிலவற்றில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதில், ஷாப்பிங் செல்லும்போது ஆண் தோழர்களை அழைக்க வேண்டும் என்று அவசியமில்லை, நண்பன் இல்லையே என்று வருந்த வேண்டாம், இனி கேரிமேன் சேவை இருக்கிறது பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

அதாவது ஷாப்பிங் செல்லும்போது பெண்கள வாங்கிய உடைமைகளை சுமந்து செல்ல, கடைகளில் பணம் செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்க என்பது போன்ற சேவைகளை பணியாளர்கள் செய்து தருவார்கள் என்று கூறப்படுகிறது.

பைகளை சுமந்து செல்லவும், எவ்வளவு நீண்ட வரிசையாக இருந்தாலும் வரிசையில் நின்று பொருள்களை வாங்கிக் கொடுக்கவும் பயிற்சி பெற்ற ஊழியர்களின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கேரிமேன் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

தில்லியின் லஜ்பத் நகரில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலான பகுதிகளுக்குள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும் இவர்கள் உதவுவார்கள்.

பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளுடன் செல்வோர், ஆன்லைனில் புகழ்பெற்றவர்கள் போன்றவர்கள் இந்த சேவையை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இதற்கு குறைந்தபட்ச சேவைக் கட்டணம் ரூ.79 லிருந்து வசூலிக்கப்படுகிறது.

இது மட்டுமல்ல வாகன நிறுத்துமிடங்களுக்கு வழிகாட்ட, மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது வழிகாட்டவும் இவர்கள் உதவுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை விரைவில் தொடங்க இருப்பதாகவும் இதற்கென பிரத்யேக இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.