ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ஆல் பாஸ்'. துஷ்யந்த், ஜனனி, ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, சுப்பிரமணிய சிவா, வினோதினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக தில்ராஜு பணியாற்றுகிறார். ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் மைதீன்.
படம் பற்றி அவர் பேசும் போது, இந்தத் திரைப்படம் ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த கதை கொண்டது. வடசென்னை என்றாலே, இது வரைக்கும் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம், பகை, கொலை என்றே தமிழ் சினிமாவில் காட்டி வந்திருக்கிறார்கள். முதல் முறையாக இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.
அவர்களின் எதார்த்த வாழ்க்கையை இதுவரை எந்தப் படமும் காட்டியதில்லை. அதை முதன் முறையாக திரைக்கதையில் எழுதியிருக்கிறேன். கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையைப் படம் பிடிப்பதில் பெரும் சவால்கள் இருந்தன. அதைச் சரியாகத் திட்டமிட்டு முடித்துள்ளோம். வடசென்னையை மையமாக வைத்து இந்தக் கதை உருவாக்கப்பட்டிருப்பதால், 45 நாள்கள் முழுப் படப்பிடிப்பையும் வடசென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே நடத்தி இருக்கிறோம்.
படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்ற நிலையில் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசையும், ட்ரெய்லரும் வெளியாகவுள்ளது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஜய் - ஏ. ஆர். முருகதாஸ்! சர்ச்சைகளைக் கிளப்பிய வெற்றிக் கூட்டணி!

இன்றளவும் கவனம் பெறும் விஜய் - த்ரிஷா கூட்டணியின் திரைப்படங்கள்!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
பேசாத அன்பின் நிழல்! காளையைச் சுற்றிய கதை வட மஞ்சுவிரட்டு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
