தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பசு நேசன்...

தமிழ்நாடு காவல் துறையின் பாதுகாப்புப் படை பிரிவில் பணியாற்றிய எஸ்.சேகர், விவசாயத்துக்காகவே பணியை துறந்தார்.

News image
Updated On :14 செப்டம்பர் 2025, 12:03 am IST

தமிழ்நாடு காவல் துறையின் பாதுகாப்புப் படை பிரிவில் பணியாற்றிய எஸ்.சேகர், விவசாயத்துக்காகவே பணியை துறந்தார். விவசாயத்தையும், கால்நடைகளையும் தனது இரு கண்களாகப் பாவிக்கும் அவர் தாளம்பாடி மலையடிவாரத்தில் பத்து ஏக்கர் நிலத்தை சீரமைத்து, பால் விற்பனை மையத்தை அமைத்து 12 ஆண்டுகளுக்கு மேலாகத் தொழிலில் சிறந்து விளங்குகிறார்.

நாமக்கல் காதப்பள்ளியைச் சேர்ந்த நாற்பத்து எட்டு வயதான எஸ்.சேகரிடம் பேசியபோது:

'2002- ஆம் ஆண்டில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சிப் பெற்று பணியில் சேர்ந்தேன். அகில இந்திய கமோண்டோ, எஸ்.பி.சி.ஐ.டி. கமோண்டோ பிரிவில் பணியாற்றுவதற்கான தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று, பணியாற்றினேன். அதிமுக்கிய பிரமுகர்களுக்கான சிறப்புப் பாதுகாப்புப் படை பிரிவில் பணியில் சேர்ந்து, 2014- ஆம் ஆண்டு வரை பணியாற்றினேன்.

எனது தந்தை சுப்பிரமணியம் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வந்தார். காவல்துறை பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். சொந்த ஊரில் கையில் இருந்த முதலீட்டை கொண்டு பால் விற்பனைத் தொழிலை தொடங்கினேன்.

தொடக்கத்தில் 40 கால்நடைகளுடன் தொடங்கிய இந்தத் தொழில் தற்போது 3,500 கால்நடைகளுடன் செயல்பட்டு வருகிறது. மாடுகளுக்கு தேவையான தீவனங்களை நாங்கள் வழங்குவதோடு, பாலுக்கு உண்டான தொகையையும் உடனுக்குடன் அவர்களுக்கு வழங்கி வருகிறேன்.

நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அவற்றை பால் குளிரூட்டும் இயந்திரத்தில் சேகரித்து, பாக்கெட்டுகளாக்கி விற்பனைக்கு அனுப்புகிறோம். நெய், பனீர், தயிர், பால்கோவா, கோமியம் என இதரப் பொருள்களையும் பேக்கிங் செய்து விற்பனை செய்கிறோம்.

Story image

தமிழ்நாட்டில் 'சன்மில்க்' என்ற பெயரில் 500-க்கும் மேற்பட்ட கிளைகள் செயல்பட்டு வருகின்றன. மற்ற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.

நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 'மதுரா மெஸ்' என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறேன்.மழைநீரை சேகரித்து விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்தும் வகையில், தாளம்பாடி மலையடிவாரப் பகுதியில் பெரிய அளவில் தொட்டி கட்டி உள்ளேன். இதனை பாராட்டி மத்திய அரசு 'நம்மாழ்வார் விருது' வழங்கியது.

வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். எந்த வகையிலும் மாசு ஏற்படக்கூடாது என்பதற்காக நாமக்கல் நகரை விட்டு சுமார் 15 கி.மீ. தொலைவில் இயற்கை எழில் சார்ந்த மலையடிவாரப் பகுதியில் தான் எங்களுடைய கால்நடை பண்ணையும், பால் நிறுவனமும் அமைந்துள்ளது.

இயற்கையோடு இணைந்த மலைப் பகுதியில் வசிக்கிறேன். ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தது. தற்போது பழகி விட்டது. பால் தரும் பசுக்கள் பாதுகாவலர்களாக இருப்பதால் பயமின்றி இயற்கையுடன் இணைந்து வாழ்கிறேன்' என்கிறார் சேகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.