கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூதுவளைக் கீரை கூட்டு

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான தண்ணீர் விட்டுக் கொதித்ததும், பாசிப்பருப்பை தண்ணீரில் களைந்து அதில் போட்டு வேக வைக்க வேண்டும்.

தூதுவளைக் கீரை கூட்டு

Published On :25 அக்டோபர் 2026, 12:00 am IST

தேவையானவை:

தூதுவளைக் கீரை- ஒரு கோப்பை

பாசிப்பருப்பு -50 கிராம்

வெங்காயம்- 4

சீரகம் - ஒரு தேக்கரண்டி

தேங்காய்த் துருவல் - ஒரு கரண்டி

உப்பு, நெய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான தண்ணீர் விட்டுக் கொதித்ததும், பாசிப்பருப்பை தண்ணீரில் களைந்து அதில் போட்டு வேக வைக்க வேண்டும். அது போல தூதுவளைக் கீரையை அதன் நரம்பை எடுத்துவிட்டு சிறுதாக நறுக்கி, பாசிப்பருப்பு வெந்து கொண்டு இருப்பதில் போட்டு வேகவிடவேண்டும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதையும் இதில் சேர்த்து நன்றாக வெந்த பிறகு உப்பைப் போட்டுக் கொதிக்க விட வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து தேவையான நெய் விட்டு சீரகத்தைப் போட்டு தாளித்து தேங்காய்த் துருவலையும் போட்டு சிவக்க வறுத்து தூதுவளைக் கீரை வேகும் கூட்டில் சேர்த்து விடவேண்டும். மீதமுள்ள நெய்யையும் அதில் விட்டு நன்றாகக் கலக்கி கீழே இறக்கி விட வேண்டும்.

தூதுவளைக்கீரை மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், கபம், தலையில் நீர் கோர்த்து சைனஸ் தொந்தரவு ஏற்படுவது போன்ற நோய்களைக் குணப்படுத்தும்.

- ஆர்.ஜெயலெட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.