பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாதாம் அல்வா

பாதாம் பருப்பை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, தோலை உரித்து எடுத்து விட வேண்டும்.

பாதாம் அல்வா

Published On :1 நவம்பர் 2026, 4:10 am IST

தேவையானவை:

பாதாம் பருப்பு- 100 கிராம்

சர்க்கரை -200 கிராம்

நெய்- 100 கிராம்

ஏலக்காய்- 5

பச்சைக் கற்பூரம், கேசரி பவுடர்- சிறிதளவு

பாதாம் பருப்பை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, தோலை உரித்து எடுத்து விட வேண்டும். பின்பு அதை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி, விழுதை எடுத்த பிறகு அந்த நீரையும் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் அரைத்த பாதாம் விழுது நீர், சர்க்கரை எல்லாவற்றையும் போட்டு கூழ் போல கரைத்து, அதை அந்தப் பாத்திரத்தில் ஊற்றி, கேசரிப் பவுடரையும் கலந்து கிளறிக் கொண்டே இருக்கவேண்டும்.

சிறிது கெட்டியானவுடன், நெய்யை சிறிது சிறிதாக விட்டுக் கிளறவேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது இறக்கி ஏலக்காய்ப் பொடியையும் பச்சைக் கற்பூரத்தையும் போட்டுக் கிளற வேண்டும். தேவையானால் பத்து முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து, அதில் சேர்த்துக் கிளறலாம். பிறகு நெய் தடவிய அகலமான அல்வா தட்டில் பாதாம் அல்வாவைப் போட்டு கத்தியால் சிறு சிறு துண்டுகள் போட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.