லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆடல் கலையை...

தான் கற்ற பரதக் கலையை கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கும் கற்றுத் தருவதோடு, அரங்கேற்றமும் செய்து அவர்களின் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நாற்பத்து இரண்டு வயதான வி.ஜாஸ்மின்.

Published On :29 மார்ச் 2026, 3:59 am IST

தான் கற்ற பரதக் கலையை கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கும் கற்றுத் தருவதோடு, அரங்கேற்றமும் செய்து அவர்களின் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நாற்பத்து இரண்டு வயதான வி.ஜாஸ்மின்.

நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட சேந்தமங்கலம் அருகே காளப்ப நாயக்கன்பட்டியைச் சேர்ந்த அவரிடம் பேசியபோது:

'தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளில் ஒன்று பரதம். இதனை கற்றுக் கொள்வதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் மிகுந்த ஆர்வம் கொள்வர். அன்று முதல் இன்று வரை தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் பரதக் கலைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

நான் பிறந்தது கேரள மாநிலத்துக்கு உள்பட்ட பாலக்காடு. தந்தை மர வியாபாரம் செய்து வந்த நிலையில் பிழைப்புக்காக நாங்கள் எங்கள் குடும்பத்தோடு இங்கு வந்து, சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியில் வசித்தோம். எனது ஆறாம் வயதில் பரதக் கலை மீது ஆர்வம் ஏற்பட்டது. கரூரைச் சேர்ந்த சிவலோகநாதனிடம் பரதம் கற்றேன்.

பின்னர், என்னைப்போல் இந்தக் கலையை ஆர்வமுடன் கற்க விரும்பும் கிராமப்புற மாணவிகளுக்கு பரதத்தை கற்றுக் கொடுக்கத் தொடங்கினேன்.

தொடக்கத்தில் சிலரே வந்த நிலையில், தற்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கற்றுவருகின்றனர். மாணவிகள் ஆர்வமுடன் பரதம் கற்பது மட்டுமின்றி, தங்களது திறமையை வெளிப்படுத்துகின்றனர். பரதநாட்டியம் என்பது அனைவரும் கற்கலாம்.

தற்போதைய நிலையில் ஆறு வயது முதல் முப்பது வயது வரையிலான பெண்கள் என்னிடம் பரதம் கற்று வருகின்றனர். நாட்டியக் கலைக்கு வயது தடையில்லை'' என்கிறார் ஜாஸ்மின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.