தேவையான பொருள்கள்:
கேரட்- 400 கிராம்
பெரிய வெங்காயம், தக்காளி -தலா 4
தேங்காய்- அரை மூடி
கொத்துமல்லி -ஒரு கட்டு
பச்சை மிளகாய் -8
இஞ்சி -ஒரு துண்டு
பூண்டு -இரண்டு பல்
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயையும், கொத்துமல்லியையும் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும் .
தக்காளி பழத்தை வெந்நீரில் போட்டு தோலை உரித்து எடுத்துவிட்டு பிழிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தேங்காயை அரைத்து பால் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்க வேண்டும். கேரட்டின் தோலை சீவி வட்டங்களாக வெட்டிக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு பாதி வெந்ததும் இறக்கிவிட வேண்டும். அதிகமாக வேகக்கூடாது.
வாணலியில் இரண்டு மேஜைக் கரண்டி எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். அரைத்த இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கி, பிறகு கொத்துமல்லித் தழை அரிந்து போட்டு பச்சை மிளகாயையும் சேர்த்து அரைத்த விழுதையும் போட்டு வதக்க வேண்டும்.
தக்காளிச்சாறு, தேங்காய்ப் பால் இரண்டையும் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். வேக வைத்த கேரட்டையும் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து, பிறகு இறக்கி விட வேண்டும். தேவையானால் கடுகு, உளுந்தம் பருப்பு தாளிக்கலாம்.
ஆர். ஜெயலெட்சுமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆரோக்கிய உணவுகள்... வீட்டிலேயே செய்யலாம்!
சமையல்... சமையல்...: வடாம் வகைகள்!
கோதுமை ரவை போளி செய்வது எப்படி?

கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைப்பு: ஆட்சியா்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
