/

உருளைக்கிழங்கு  சில்லி

முதலில் உருளைக்கிழங்கை தோலுரித்து, நீளமாக நறுக்கி, உப்பு கலந்த நீரில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 12:00 am IST

தேவையானவை :

உருளைக்கிழங்கு - கால் கிலோ
கடலை மாவு -1 கிண்ணம்
பெரிய வெங்காயம் -2
குடைமிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
உப்பு- தேவைக்கேற்ப
மிளகாய்த் தூள் - 2  தேக்கரண்டி
எண்ணெய்  - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 1
தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி

செய்முறை : 

முதலில் உருளைக்கிழங்கை தோலுரித்து, நீளமாக நறுக்கி, உப்பு கலந்த நீரில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, மிளகாய்த் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியான  விழுது போன்று கலந்து கொள்ள வேண்டும். பின்னர் வாணலியில்  பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்விட்டு  காய்ந்ததும், உருளைக்கிழங்கை தண்ணீரில் இருந்து எடுத்து, ஒவ்வொன்றாக கடலை மாவு விழுதில் புரட்டி, எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். 
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது, குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், உப்பு சேர்த்து கிளற வேண்டும். அடுத்து தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறி, பின் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு புரட்டி இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு சில்லி ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.