மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இனி ரீல்ஸ்களுக்கு ஃபேஸ் புக் முன்னுரிமை

புகைப்படங்கள், எழுத்து மூலம் பகிரப்படும் தகவல்கள் வெளிப்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்து வந்த ஃபேஸ்புக் இனி, ரீல்ஸ் வடிவிலான விடியோக்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது.

Published On :25 அக்டோபர் 2026, 4:02 am IST

புகைப்படங்கள், எழுத்து மூலம் பகிரப்படும் தகவல்கள் வெளிப்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்து வந்த ஃபேஸ்புக் இனி, ரீல்ஸ் வடிவிலான விடியோக்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ஃபேஸ்புக் செயலியை 40 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரையில் இந்தச் செயலியில் புகைப்படங்களையும், எழுத்துப்பதிவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

சமூக ஊடகத்தில் பலர் நீண்ட காலமாக ஃபேஸ்புக்கை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஃபேஸ்புக்கை இனி திறக்கும்போது நேரடியாக முழுத்திரை ரீல்ஸ் விடியோ வெளியாகும்.

சோதனை முயற்சியில் இந்தியாவில் பலருக்கு இந்த முறை அறிமுகமாகி வருகிறது. விடியோக்களுக்கு முன்னுரிமை அளித்தும், மேலும் பயனாளிகளை ஈர்க்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனம் நடத்திய ஆய்வுகளில் 97% பேர் அதன் தளங்களில் தினமும் விடியோக்களைப் பார்ப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் நாளுக்குநாள் விடியோ பயன்பாடு அதிகரித்து வருவதால், விடியோக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சியை மெட்டா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஃபேஸ்புக்கில் வழக்கமான பீட் சேவை விடியோக்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் இதை பயனர்கள் தேர்வு செய்து பார்க்க வேண்டும்.

இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, 2020-இல் இன்ஸ்டா

கிராமில் ரீல்ஸ் விடியோக்கள் சோதனை செய்யப்பட்டு பிரபலமானது. தற்போது, இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் விடியோக்கள் முதலில் தோன்றும் வகையில் முன்னுரிமை அளிக்க மெட்டா நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருவது இந்தியாவில் அனைத்து வயது பயனர்களையும் கவருமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.