முனைவர் ஜி. குமார்
இணைய உலகிலும் மூடநம்பிக்கைகள் இருக்கவே செய்கின்றன. 'டிரிஸ்கைடேகாஃபோபியா' என்பது 13-ஆவது எண் பற்றிய அச்சம்.
இயேசு பிரானின் கடைசி இரவு உணவின்போது அவரைக் காட்டிக் கொடுத்தவர்கள் 13 பேர் என்று சொல்லப்படுகிறது. மேலும், வடக்கு ஜெர்மனியில் புழங்கும் புராணங்களின்படி 12 ஒரு முழுமை எண். 12 மாதங்கள், 12 ராசிகள் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், அடுத்து வரும் 13 ஜோடியும் முழுமையும் அற்ற எண். எனவே தவிர்க்கப்பட வேண்டியது என்கின்றனர்.
இதனால் தங்கும் நட்சத்திர விடுதிகளிலும் 13-ஆவது அடுக்கு இல்லாமல் இருக்கும். சில விமானங்களில் வரிசை எண் '13' இருக்காது. 12-க்குப் பின்னர் 14-ஆம் வரிசையை இருக்கும். உலகளாவிய நம்பிக்கைகளின்படியே சில நிறுவனங்களும் அவ்வாறு செய்கின்றன.
மேகங்கள் இடையே வானூர்தி செல்லும்போது மெல்லிய அதிர்வுகள் ஏற்படலாம். இருக்கையில் பட்டையைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாலும், ஒருவருடைய மனச்சஞ்சலம் அதிகரிப்பது உறுதி.
இத்தகைய சிறு சிறு மன உளைச்சல்களைக் குறைக்கவே விமானங்களில் சில நிறுவனங்கள் 13-ஆம் வரிசையை நீக்குகின்றன.
'சுமார் 17% பயணிகள் விமானத்தில் ஏறும் முன் அதன் வெளிப்புறத்தைத் தொட்டு வணங்கிவிட்டே நுழைகின்றனர். சில விமானிகள் அதன் இறக்கைப் பகுதியைத் தட்டிவிட்ட பின்னரே நுழைந்து இருக்கையில் அமர்கின்றனர். அவர்கள் ஒரே மாதிரியான உணவையே பறக்கும் முன்னர் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்' என்று ஐரோப்பாவின் ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தினர் கூறுகின்றனர்.
இத்தாலி, பிரேசில் உள்ளிட்ட நாட்டு மக்களிடையே எண் 17-ம் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு லத்தீன் மொழியில் 'நான் வாழ்ந்தேன்' என்பது பொருள். எண் 14-ஐ 'ஃபோர்ட்டீன்' என உச்சரிக்கும்போது சீன மொழியில் 'இறந்து விடுவேன்' என்ற பொருளைத் தருகிறது. எனவே, சில சர்வதேச விமான நிறுவனங்கள் 13, 14, 17 ஆகிய வரிசை எண்களையும் நீக்கி விடுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (06 மே 2026) 12 ராசிகளுக்கும்! எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு!

சாதகமான பலன் யாருக்கு? தினப்பலன்கள்!

துலா ராசிக்கு பாராட்டு! தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (01 மே 2026) 12 ராசிகளுக்கும்! மேஷ ராசிக்கு மகிழ்ச்சி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
