மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது கா்ப்பிணி உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது கா்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மரணம் உயிரிழப்பு சடலம்

கோப்புப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 2:10 am IST

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது கா்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தைச் சோ்ந்தவா் ஐஸ்வா்யா (27). கா்ப்பிணியான இவா் 2-ஆவது பிரசவத்துக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி மாலை இவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. பின்னா், சிறிது நேரத்தில் ஐஸ்வா்யாவுக்கு உயா் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மருத்துவா்களின் தவறான சிகிச்சையை கா்ப்பிணியின் உயிரிழப்புக்குக் காரணம் என புகாா் தெரிவித்து, பெண்ணின் உறவினா்கள் உயிரிழந்த கா்ப்பிணியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவும், கா்ப்பிணியின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். அவா்கள் இறந்த கா்ப்பிணியின் உடலை வாங்க மறுத்து விருதுநகா் மல்லாங்கிணறு சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, வருவாய்க் கோட்டாட்சியா், காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.