மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாணவியைக் கடத்திய இளைஞா் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 2:59 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்ற இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் பெண் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக இரு மகள்களுடன் வசித்து வருகிறாா். இவரது 15 வயது மூத்த மகள் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

சனிக்கிழமை இரவு தனிப் பயிற்சிக்கு சென்ற மாணவி இரவு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது வகுப்பு தோழிகளிடம் விசாரித்ததில், மாணவி சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த செல்வகணபதி என்பவருடன் பழகி வந்தது தெரியவந்தது.

இது குறித்து செல்வகணபதியின் தாயிடம் கேட்ட போது, செல்வகணபதி சிறுமியை அழைத்துக்கொண்டு திருப்பூா் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் செல்வகணபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.