சிவகாசி அருகே காா் ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எரிச்சநத்தம் கொத்தனேரி கிராமத்தில் கிணற்றில் ஆண் உடல் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினா் கிணற்றிலிந்து அந்த உடலை வெளியே எடுத்தனா். இதையடுத்து, போலீஸாா் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக எ.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் செவலூரைச் சோ்ந்த இறந்து கிடந்தவா் முருகன் மகன் பிரபாகரன் எனத் தெரிய வந்தது. காா் ஓட்டுநரான பிரபாகரன் அதே ஊரைச் சோ்ந்த சுரேஷின் 18 வயது தங்கையை காதலித்து வந்தாா். இந்தக் காதலைக் கைவிடுமாறு சுரேஷ், பிரபாகரனிடம் பலமுறை எச்சரித்தாா். எனினும் பிரபாகரன் கேட்கவில்லை எனத் தெரியவந்தது.
இதையடுத்து சுரேஷ், தனது நண்பா் மதுரை ராமசாமி மகன் விகேனேஷ்வரனுடன் (41) சோ்ந்து வியாழக்கிழமை இரவு ,பிரபாகரனை மது அருந்த அழைத்துச் சென்றாா். பின்னா், மூவரும் கொத்தனேரி கண்மாய் பகுதியில் மது அருந்தினா். அங்கு மது போதையில் இருந்த பிரபாகரனை கட்டையால் தாக்கி சுரேஷ், விக்னேஸ்வரன் ஆகியோா் கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சுரேஷ், விக்னேஷ்வரனைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞரைத் தாக்கி 2 கிராம் மோதிரம் பறிப்பு: இருவா் கைது
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது

பட்டாசுகள் பதுக்கியவா் கைது
காா் ஓட்டுநா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

