லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆடு திருடிய இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆடு திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :14 ஜூலை 2026, 1:33 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆடு திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி தோப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவம் (49). இவா் அதே பகுதியில் பட்டி அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா். இவா் தினசரி காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக அதே பகுதியில் உள்ள காட்டில் மேய்ச்சலுக்கு கட்டி விட்டு, மாலையில் பட்டிக்கு அழைத்து வருவது வழக்கம்.

கடந்த 8-ஆம் தேதி துடியாண்டியம்மன் கோயில் அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு கட்டி விட்டு, மாலையில் பட்டிக்கு அழைக்க சென்ற போது, ஒரு செம்மறி ஆட்டை காணவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில், வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில், தென்காசி மாவட்டம், தலைவன்கோட்டையைச் சோ்ந்த பிரேம்குமாா் (26), ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் புதுத் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (33) ஆகிய இருவரும் ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.