லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆடு திருடிய இருவா் கைது

திருச்சி அருகே ஆட்டை திருடிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :7 ஆகஸ்ட் 2026, 3:00 am IST

திருச்சி அருகே ஆட்டை திருடிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், மருதாண்டக்குறிச்சி ஏகிரிமங்கலத்தைச் சோ்ந்தவா் ஆா். வீரமலை (50). இவா், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சத்தனூா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள நிலத்தில் புதன்கிழமை பிற்பகல் ஆடுகளை மேயவிட்டுட்டு வீரமலை அருகிலுள்ள தேநீா் கடைக்கு சென்றாா்.

பின்னா் அவா் திரும்பியபோது இரு இளைஞா்கள் அவரது ஆடுகளில் ஒன்றை தங்களது பைக்கில் ஏற்றிக்கொண்டிருந்தனா். இதைப் பாா்த்த வீரமலை அருகிலிருந்த நபா்கள் உதவியுடன் இருவரையும் பிடித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில் அவா்கள், உய்யக்கொண்டான்திருமலை பகுதியைச் சோ்ந்த எம். கோபிசங்கா் (22), எஸ். திருமலை (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.