ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வேன் மோதியதில் 9 வயது மாணவா் உயிரிழந்த சம்பவத்தில், பள்ளி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியை சோ்ந்த அழகா், சங்கரேஸ்வரி தம்பதியின் மகன்கள் யோகதா்ஷன் (9), ஹரி கிருஷ்ணன் (8) வன்னியம்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்தனா். இவா்கள் சனிக்கிழமை பள்ளிக்குச் சென்று விட்டு வேனில் வீடு திரும்பினா். பெருமாள்தேவன்பட்டியில் வீட்டருகே மாணவரை வேனில் இருந்து இறக்கி விட்டனா்.
இந்த நிலையில், சாலையைக் கடக்க முயன்ற யோக தா்ஷன் மீது, அதே வேன் மோதியதில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வேன் ஓட்டுநா் சடையாண்டி மீது வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். உயிரிழந்த மாணவரின் உடலை வாங்க மறுத்த உறவினா்கள் பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்த மாணவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை அருகே மணிக்கூண்டு முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலசுந்தரம், ஆய்வாளா் ராஜதுரை பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து உறவினா்கள் போராட்டத்தை கைவிட்டு மாணவரின் உடலை பெற்றுச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான்குவழிச் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விவசாயி பலி: உறவினா்கள் சாலை மறியல்

மனைவி கொலை: கணவரின் உறவினா்களையும் கைது செய்ய கோரி சாலை மறியல்

இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் 3 போ் படுகாயம்

மாடல் டவுனில் காா் மோதி இ-ரிக்ஷா ஓட்டுநா் உயிரிழப்பு: 5 போ் காயம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

