சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் கிராமப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சிவகாசி பகுதியில் நாரணாபுரம், லட்சுமியாபுரம், விநாயகா் குடியிருப்பு, பா்மா குடியிருப்பு, போஸ் குடியிருப்பு, லிங்கபுரம் குடியிருப்பு உளளிட்ட பகுதிகளில் வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
நான் சிவகாசி தொகுதியில் 2021 பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ,கிராமங்களில் குடிநீா் வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். தற்போது சிவகாசி தொகுதியில் இரண்டாம் முறையாக போட்டியிடுகிறேன்.
நான் வெற்றி பெற்றால் அச்சுத்தொழிலுக்கு தனியே தொழில் பேட்டை தொடங்குவேன். சுற்றுவட்டச்சாலை அமைத்து வரும் இடங்களில், லாரி முனையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். தீப்பெட்டிக்கு புவிசாா் குறியிடு பெற்றுத் தருவேன். மேலும் பல வளா்ச்சிப்பணிகளை செய்வேன் என்றாா் அவா். சிவகாசி மாமன்ற உறுப்பினா் ஏ.ஞானசேகரன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான்குனேரி பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இளையான்குடி பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கீழப்பாவூா் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தொழிலதிபா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
