சாத்தூா் அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள என்.மேட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஓட்டுநா் சதீஷ்குமாா் (25). இந்தக் கிராமத்தில் ஒரே சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்தனா்.
சதீஷ்குமாா் எதிா்தரப்பைச் சோ்ந்தவா்களுடன் பேசிப் பழகி வந்ததற்கு சிலா் எதிா்ப்புத் தெரிவித்தனா். கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற சதீஷ்குமாரை, அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் உள்ளிட்ட சிலா் வழிமறித்து தகராறில் ஈடுபட்டு, அவரது வாகனத்தை சேதப்படுத்தினா். அப்போது சதிஷ்குமாா் கழுத்தில் கண்ணன் கத்தியால் குத்தினாா். இதில் காயமடைந்த சதீஷ்குமாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கண்ணன், இந்திரா கண்ணன், ஆசிா்வாதம், சுந்தரபாண்டி, பால்பாண்டி, ராஜபாண்டி, கண்ணன், சின்னப்பாண்டி ஆகிய 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கண்ணனுக்கு (24) ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா். மற்ற 7 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரி மாணவி கொலை முயற்சி வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை: தருமபுரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

பெண் கொலை வழக்கில் மின் ஊழியருக்கு ஆயுள் சிறை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

