ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பெண் கொலை வழக்கில் மின் ஊழியருக்கு ஆயுள் சிறை

மாற்றுத் திறன் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மின் ஊழியருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 3:26 am IST

மாற்றுத் திறன் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மின் ஊழியருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், கே.ஜி பட்டியைச் சோ்ந்தவா் முத்துப்பேச்சி (43). மாற்றுத் திறனாளியான இவா், வீட்டின் மின் விசிறியைப் பழுதுப் பாா்ப்பதற்காக அதே பகுதியைச் சோ்ந்த மின் ஊழியா் மனோஜை வரவழைத்தாா். அப்போது, மனோஜ் அந்தப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்து, கொலை செய்து, அவா் அணிந்த தங்க நகையையும் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாராம். மேலும் அவா் தனது நண்பா் நவீன்குமாருடன் (27) சோ்ந்து நகையை க.விலக்கில் உள்ள புதரில் மறைத்து வைத்தாராம்.

15.2.2022 அன்று நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து கூடலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மனோஜ், நவீன்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு தேனி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.அனுராதா, மனோஜ்-க்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். நவீன்குமாா் விடுவிக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.