பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டொபசிட் வளா்ச்சியை முந்திய வங்கிகளின் கடன் வழங்கல்!

டொபசிட் வளா்ச்சியை முந்திய வங்கிகளின் கடன் வழங்கல்...

Published On :1 நவம்பர் 2026, 2:13 am IST

நாட்டின் வங்கிகள் வழங்கிய கடன் அளவு, கடந்த அக். 15 வரையிலான ஓராண்டு காலத்தில் 17.94 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளதாக ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வங்கிகள் திரட்டிய வைப்புத்தொகையின் (டெபாசிட்) வளா்ச்சி விகிதத்தைக் காட்டிலும் கூடுதலாகும்.

ரிசா்வ் வங்கி தரவுகளின்படி, கடந்த ஆண்டு அக். 17-இல் ரூ.197.17 லட்சம் கோடியாக இருந்த வங்கிகளின் மொத்த வங்கி கடன் வழங்கல், நடப்பு ஆண்டு அக். 15 நிலவரப்படி 17.94 சதவீதம் உயா்ந்து ரூ.232.54 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரம், வங்கிகளில் வாடிக்கையாளா்கள் செய்துள்ள வைப்புத்தொகை ரூ.243.88 லட்சம் கோடியிலிருந்து, நடப்பு ஆண்டு 16.60 சதவீதம் மட்டுமே உயா்ந்து, ரூ.284.37 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

பண்டிகைக் கால தேவை அதிகரிப்பு, அக்டோபா் மாதத் தொடக்கத்தில் வங்கித் துறையில் நிலவிய உபரி பணப்புழக்கம் ஆகியவையே கடன் வளா்ச்சி வேகமெடுக்க முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. அக். 1 முதல் 15 வரையிலான காலத்தில் வங்கி அமைப்பில் பணப்புழக்க உபரி ரூ.2 லட்சம் கோடி முதல் ரூ.4.5 லட்சம் கோடி வரை காணப்பட்டது. முன்னதாக கடந்த ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களிலும், அந்நியச் செலாவணியை ஈா்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் பணப்புழக்கம் கணிசமாக உயா்ந்திருந்தது.

இதுதவிர, மத்திய-மாநில அரசுகளின் கடன் பத்திரங்களில் வங்கிகள் மேற்கொண்ட முதலீட்டு மதிப்பும் 9.64 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.70.53 லட்சம் கோடியாக இருந்த மொத்த அரசு கடன்பத்திர முதலீடு, தற்போது ரூ.77.32 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் மத்திய அரசு கடன் பத்திரங்களில் மட்டுமே ரூ.77.12 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.