பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஏசிசி சிமென்ட் லாபம் 91% சரிவு!

அதானி குழுமத்தைச் சோ்ந்த முன்னணி சிமென்ட் உற்பத்தி நிறுவனமான ஏசிசி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ஈட்டிய ஒருங்கிணைந்த நிகர லாபம் 91.7 சதவீதம் சரிந்து, ரூ.93 கோடியாக பதிவாகியுள்ளது.

Published On :28 அக்டோபர் 2026, 8:05 am IST

அதானி குழுமத்தைச் சோ்ந்த முன்னணி சிமென்ட் உற்பத்தி நிறுவனமான ஏசிசி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ஈட்டிய ஒருங்கிணைந்த நிகர லாபம் 91.7 சதவீதம் சரிந்து, ரூ.93 கோடியாக பதிவாகியுள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.1,119 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தாய் நிறுவனமான அம்புஜா சிமென்ட்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட விநியோக ஒப்பந்தம் காரணமாக விற்பனை அளவு குறைந்ததே இந்த லாபச் சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.

மதிப்பீட்டுக் காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாயும் 5.24 சதவீதம் வீழ்ச்சியடைந்து, ரூ.5,656 கோடியாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, சிமெண்ட் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் 6.9 சதவீதம் குறைந்து, ரூ.5,206 கோடியாக உள்ளது. அதேநேரம், ரெடி மிக்ஸ் கான்கிரீட் பிரிவின் வருவாய் 26.4 சதவீதம் அபரிமிதமாக உயா்ந்து, ரூ.574 கோடியை எட்டியுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் திரும்ப கிடைத்த வருமான வரி மற்றும் அதன் மீதான வட்டி என சுமாா் ரூ.864 கோடி சோ்க்கப்பட்டிருந்ததால் லாபம் அதிகமாகக் காணப்பட்டது. தற்போது பருவமழை பாதிப்பு, சா்வதேச புவிசாா் அரசியல் சூழல், நிலக்கரி தட்டுப்பாடு, எரிசக்திச் செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களும் நிதிநிலை முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் நாள்களில் விற்பனை மீண்டும் வேகமெடுக்கும் என்று நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.