தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜஸ்ட் டயல் Q2 லாபம் 9.7 சதவீதம் சரிவு!

ஜஸ்ட் டயல் லிமிடெட், நிதியாண்டின் 2வது காலாண்டில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.73 சதவீதம் சரிந்ததாக தெரிவித்தது.

ஜஸ்ட் டயல் லிமிடெட்

Published On :20 அக்டோபர் 2026, 6:02 pm IST

புதுதில்லி: முன்னணி தேடுபொறி நிறுவனமான ஜஸ்ட் டயல் லிமிடெட், நிதியாண்டின் 2வது காலாண்டில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.73 சதவீதம் சரிந்து ரூ. 107.8 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

கடந்த வருடம் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் நிறுவனம் ரூ. 119.44 கோடி நிகர லாபம் பதிவு செய்திருந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ. 303.07 கோடியாக இருந்த ஜஸ்ட் டயலின் வருவாய், செப்டம்பர் வரையான காலாண்டில் இது 13.11 சதவீதம் அதிகரித்து ரூ. 342.82 கோடியாக உள்ளது.

நிறுவனத்தின் 2வது காலாண்டில், அதன் மொத்த செலவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.6 சதவீதம் அதிகரித்து ரூ. 262.81 கோடியாக இருந்தது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் சில்லறை வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸுக்குச் சொந்தமான இந்நிறுவனம், 2027 நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் மொத்த வருமானத்தில் 5.6 சதவீதம் உயர்ந்து ரூ. 397.38 கோடியாக இருந்ததாகத் தெரிவித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், ஜஸ்ட் டயல் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கு, மும்பை பங்குச் சந்தையில் 2.82 சதவீதம் உயர்ந்து ரூ. 732.55 ஆக நிலைபெற்றது.

Summary

Just Dial Ltd, has reported a decline of 9.73 per cent in its consolidated net profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.