மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 71,975 கோடி டாலராக சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 126.9 கோடி டாலர் குறைந்து 71,974.8 கோடி டாலராக சரிந்துள்ளது.

ரிசர்வ் வங்கி | RBI

Published On :30 அக்டோபர் 2026, 9:31 pm IST

மும்பை: இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு அக்டோபர் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 126.9 கோடி டாலர் குறைந்து 71,974.8 கோடி டாலராக சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.

அக்டோபர் 16 ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 501.1 கோடி டாலர் குறைந்து 72,101.6 கோடி டாலராக இருந்தது.

வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான அந்நியச் செலாவணி வைப்புநிதித் திட்டத்தின்மூலம் வங்கிகள் திரட்டிய சுமாா் 13,300 கோடி டாலர் என்ற சாதனை அளவைத் திரட்டியதால், செப்டம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கையிருப்பு 78.5706 கோடி டாலர் என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட நிலையில் அதன் பிறகு கையிருப்பு சரிவுப் போக்கில் சென்றது.

அக்டோபர் 23ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கியப் பங்கைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்துகளின் மதிப்பு 135.8 கோடி டாலர் அதிகரித்து 59,320.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

இந்த வாரத்தில் தங்கக் கையிருப்பின் மதிப்பு 265 கோடி டாலர் குறைந்து 10,315 கோடி டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சிறப்பு வரைதல் உரிமைகள் 2.7 கோடி டாலர் அதிகரித்து 1,860.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 40 லட்சம் டாலர் குறைந்து 478.7 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Summary

India's forex reserves further dropped by USD 1.269 billion to USD 719.748 billion.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.