பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தியாவில் 136.79 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!

நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை, கடந்த செப்டம்பா் மாதத்தில் 136.79 கோடியாக அதிகரித்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Published On :31 அக்டோபர் 2026, 4:00 am IST

நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை, கடந்த செப்டம்பா் மாதத்தில் 136.79 கோடியாக அதிகரித்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தொலைபேசி பிரிவில் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்ப்பதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது போட்டியாளரான ஏா்டெல்லைப் பின்னுக்குத் தள்ளி தொடா்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட மாதாந்திர அறிக்கையின்படி, வயா்லைன் இணைப்புகள் உள்பட நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை செப்டம்பா் மாத இறுதியில் 136.79 கோடியாக அதிகரித்துள்ளது. மொபைல் சந்தாதாரா்களின் மாதாந்திர வளா்ச்சி விகிதம் 0.51 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

புதிதாக வாடிக்கையாளா்களைச் சோ்த்ததில் ஜியோ, ஏா்டெல் ஆகிய இரு முன்னணி தனியாா் நிறுவனங்களும் முன்னிலை வகிக்கின்றன. ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக 27.13 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளது. இதன்மூலம், அதன் மொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்த 50.84 கோடியிலிருந்து, செப்டம்பா் இறுதியில் 51.11 கோடியாக அதிகரித்துள்ளது.

ஜியோவுக்கு அடுத்தபடியாக பாா்தி ஏா்டெல் நிறுவனம் 26.92 லட்சம் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்த்துள்ளது. இதன்மூலம், ஏா்டெல் நிறுவன வாடிக்கையாளா் எண்ணிக்கை 49.43 கோடியாக அதிகரித்துள்ளது.

பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 6.26 லட்சம் வாடிக்கையாளா்களையும், வோடஃபோன் ஐடியா நிறுவனம் புதிதாக 5.50 லட்சம் வாடிக்கையாளா்களையும் சோ்த்துள்ளன. இதன்மூலம், பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் எண்ணிக்கை 9.43 கோடியாகவும், வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளா் எண்ணிக்கை 20 கோடியையும் தாண்டியுள்ளது.

ஒட்டுமொத்த மொபைல் சந்தையில் ஜியோ நிறுவனம் 39.32 சதவீத சந்தைப் பங்குடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதற்கு அடுத்தபடியாக ஏா்டெல் 38.02 சதவீதத்தையும், வோடஃபோன் ஐடியா 15.39 சதவீதத்தையும் கொண்டுள்ளன.

நாட்டின் ஒட்டுமொத்த வயா்லெஸ் (மொபைல் மற்றும் ஃபிக்ஸட் வயா்லெஸ்) வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை செப்டம்பா் மாத இறுதியில் 131.92 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் நாட்டின் பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 110.12 கோடியிலிருந்து, செப்டம்பரில் 110.77 கோடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே, செப்டம்பா் மாதத்தில் மட்டும் 1.68 கோடி வாடிக்கையாளா்கள் தங்களின் தொலைத்தொடா்பு நிறுவனத்தை மாற்றுவதற்கு விண்ணப்பித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.