தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

இந்தியாவில் 136.07 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!

நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 136.07 கோடியாக அதிகரித்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Published On :30 செப்டம்பர் 2026, 1:06 am IST

நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 136.07 கோடியாக அதிகரித்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தொலைபேசி பிரிவில் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்ப்பதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது போட்டியாளரான ஏா்டெல்லைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட மாதாந்திர அறிக்கையின்படி, வயா்லைன் இணைப்புகள் உள்பட நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் 136.07 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம், நாட்டின் மாதாந்திர தொலைத்தொடா்பு வளா்ச்சி விகிதம் 0.47 சதவீதமாக பதிவாகியுள்ளது.

புதிதாக வாடிக்கையாளா்களைச் சோ்த்ததில் ஜியோ, ஏா்டெல் ஆகிய இரு முன்னணி தனியாா் நிறுவனங்களும் முன்னிலை வகிக்கின்றன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக 24 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளது. இதன்மூலம், அதன் மொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை ஜூலை மாத இறுதியில் இருந்த 50.60 கோடியிலிருந்து, ஆகஸ்ட் இறுதியில் 50.84 கோடியாக அதிகரித்துள்ளது.

ஜியோவுக்கு அடுத்தபடியாக பார்தி ஏா்டெல் நிறுவனம் 21.1 லட்சம் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்த்துள்ளது. இதன்மூலம், ஏா்டெல் நிறுவன வாடிக்கையாளா் எண்ணிக்கை 48.94 கோடியிலிருந்து, 49.16 கோடியாக அதிகரித்துள்ளது.

தொலைபேசி...

நாட்டின் ஒட்டுமொத்த வயா்லெஸ் (மொபைல் மற்றும் ஃபிக்ஸட் வயா்லெஸ்) வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் 131.22 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மாதாந்திர வளா்ச்சி விகிதம் 0.46 சதவீதமாகும்.

இதில் நகா்ப்புற வயா்லெஸ் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஜூலையின் 75.38 கோடியிலிருந்து, ஆகஸ்டில் 75.91 கோடியாகவும்; கிராமப்புற பகுதி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 55.24 கோடியிலிருந்து, 55.31 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

மற்ற நிறுவனங்கள்...

வோடஃபோன் ஐடியா நிறுவனம் புதிதாக 5.06 லட்சம் வாடிக்கையாளா்களையும், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 4.93 லட்சம் வாடிக்கையாளா்களையும் சோ்த்துள்ளன. அதேநேரம், எம்டிஎன்எல் நிறுவனம் 5,900 வாடிக்கையாளா்களை இழந்துள்ளது.

ஒட்டுமொத்த தொலைபேசி சந்தையில் தனியாா் நிறுவனங்கள் 92.75 சதவீத வாடிக்கையாளா்களுடன் ஆதிக்கம் செலுத்துகின்றன. மீதமுள்ள 7.25 சதவீதத்தை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தன்வசம் வைத்துள்ளன. அதிக ‘ஆக்டிவ்’ வாடிக்கையாளா்களை (99.01 சதவீதம்) கொண்ட நிறுவனமாக ஏா்டெல் தொடா்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.