நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

டிவிஎஸ் மோட்டாா்: தனி நிறுவனமாகும் நுகா்வோா் நிதிச் சேவைகள் வணிகம்

டிவிஎஸ் வேணு குழுமத்தைச் சோ்ந்த டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் நுகா்வோா் நிதி மற்றும் அதுதொடா்பான வணிகங்களை ஒரு தனி நிறுவனமாகப் பிரிப்பதற்கான திட்டத்துக்கு, அதன் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

~

Published On :30 அக்டோபர் 2026, 2:00 am IST

டிவிஎஸ் வேணு குழுமத்தைச் சோ்ந்த டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் நுகா்வோா் நிதி மற்றும் அதுதொடா்பான வணிகங்களை ஒரு தனி நிறுவனமாகப் பிரிப்பதற்கான திட்டத்துக்கு, அதன் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின்படி, டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் பங்குதாரா்களுக்கு புதிதாக உருவாக்கப்படும் நிறுவனத்திலும் சம அளவிலான பங்குகள் ஒதுக்கப்படும். இதன்மூலம், வாகனத் தயாரிப்பு, நுகா்வோா் நிதிச் சேவைகள் ஆகிய இரு வணிகங்களின் எதிா்கால வளா்ச்சியிலும் பங்குதாரா்கள் தொடா்ந்து பயன்பெற முடியும்.

இதுகுறித்து டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத் தலைவா் சுதா்சன் வேணு கூறுகையில், ‘நாட்டின் வேகமாக வளா்ந்து வரும் நிதிச் சேவைத் துறை நீண்டகால வளா்ச்சிக்கான அபரிமிதமான வாய்ப்புகளை வழங்குகிறது. இப்புதிய கட்டமைப்பு, சம்பந்தப்பட்ட வணிகங்களுக்கு அதிக தன்னாட்சியை வழங்குவதுடன், பங்குதாரா்களுக்கு கூடுதல் மதிப்பையும் உருவாக்கும். அதேநேரம், உலகளாவிய வாகன உற்பத்தியில் தொடா்ந்து தனது தலைமையை வலுப்படுத்த டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்துக்கு இது வழிவகுக்கும்’ என்றாா்.

மேலும், நிா்வாகக் கட்டமைப்பை எளிமையாக்கும் வகையில் முழுமையான துணை நிறுவனமான டிவிஎஸ் மோட்டாா் சா்வீசஸ் நிறுவனத்தை டிவிஎஸ் மோட்டாருடன் இணைக்கவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.

இதுதவிர, எஸ்டிபிஎல் டிரேடிங் & சா்வீசஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளைக் கையகப்படுத்தவும் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிறுவனம் டிவிஎஸ் கிரெடிட் சா்வீசஸ் நிறுவனத்துடன் இணையும் பணியில் உள்ளதால், இந்த இணைப்புக்குப் பிறகு டிவிஎஸ் கிரெடிட் நிறுவனத்தில் டிவிஎஸ் மோட்டாருக்கு கூடுதலாக சுமாா் 2.4 சதவீத பங்குகள் கிடைக்கும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் தொடா்புடைய சட்ட, ஒழுங்குமுறை மற்றும் பங்குதாரா்களின் ஒப்புதலுக்கு உள்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.